வெள்ளி, 24 ஜூன், 2011

திப்பு சுல்தான்


திப்பு சுல்தான்

திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனாகல்லி – மே 4, 1799, சிறீரங்கப்பட்டினம்), மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான ஃவாதிமாவின் மகனாவார். தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூர் பேரரசை ஆண்ட திப்பு சுல்தான் 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் மன்னராகத் திகழ்ந்த திப்பு சுல்தான் சிறந்த படைவீரராகவும்,கவிபடைக்கும் ஆற்றலும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.சமயங்களினை மதித்த திப்பு சுல்தான் பிரெஞ்சு ஆட்சியாளர்களின் வேண்டுகோளுக்கிணைய தேவாலயம் ஒன்றினை மைசூரில் எழுப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரித்தானியப் படைகளுடனான இரண்டாம் மைசூர்ப் போரில் தந்தையான ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த திப்பு சுல்தான் மூன்றாவது ஆங்கிலோப் போரிலும், நான்காம் ஆங்கிலோப் போரிலும் பிரித்தானிய அரசினாலும் அதன் கூட்டுப் படைகளினாலும் தோற்கடிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திப்பு சுல்தான் மே 4 ,1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமானஸ்ரீரங்கப்பட்டினத்தினில் இறந்தது குறிப்பிடத்தக்கது.
பிறப்பும், வளர்ப்பும்
கி.பி. 18 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துங்கபத்திரா நதிக்கரையிலிருந்து காவேரி வரை அதாவது கிருஷ்ணா நதியிலிருந்து திண்டுக்கல் வரை தெற்கு வடக்காக நானூறு மைல் தூரமும் மலபாரிலிருந்து கிழக்கு தொடர்ச்சிமலை வரை மேற்கு கிழக்காக முன்னூறு மைல் தூரம் கொண்ட பரந்த பூமியை 17 ஆண்டுகள் நல்லாட்சி செய்த தீரர் திப்புசுல்தான். நவாப் ஹைதர் அலிகான் பஹதூர் பஃருன்னிசா தம்பதிகளுக்கு நன்மகனாக தேவனஹள்ளியில் கி.பி.1750 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ம் நாள் வெள்ளிக் கிழமை அவதரித்தார். தீரர் திப்புசுல்தான் தந்தை ஹைதருடன் பழகி 16 வயதிலேயே சிறந்த யுத்தத் தந்திரங்கள்,ராஜதந்திரங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்று சிறந்த கல்விமானாகவும் படைத்தளபதியாகவும் விளங்கினார்.
வெற்றித்திருமகன்
திப்பு கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப்ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப்படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார் கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப்படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.
திருமணம்
1774 ம் ஆண்டு இறுதியில் ருக்கையாபானுவையும் சில மாதம் கழித்து தந்தை ஹைதர் அலியின் விருப்பத்திற்காக ஆற்காடு ரோஷன் பேகத்தையும் திப்பு திருமணம் முடித்துக் கொண்டார். திருமணம் முடிந்த பின் 1776 ல் மராட்டியர் நைஜாமியருடன் போரிட்டு காதிக்கோட்டையை திப்பு சுல்தான் வென்றார்.
ஹைதரின் மரணமும் அரியணையும்
1782 டிசம்பர் மாதம் 6ம் தேதி ஹைதர் அலி இறையடி சேர்ந்தார். அதன் பின்னர் 26 நாட்கள் மரணச் செய்தி யாருக்கும் அறிவிக்காமல் ரகசியமாக வைக்கப்பட்டு பொன்னானியிலிருந்து இளவரசர் திப்பு கோலார் வந்தபிறகே ஹைதர் அலியின் மரணம் அறிவிக்கப்பட்டது அதன் பின் 1782 டிசம்பர் 26 ம் தேதி (ஹிஜ்ரி 1197 முஹர்ரம் 20 ம் தேதி ) சனிக்கிழமை தனது 32 வது வயதில் நவாப் திப்பு சுல்தான் பஹதூர் என்று திப்புசுல்தான் மகுடம் சூட்டிக் கொண்டார் மகுடம் சூட்டியதும் புதிய தமது ராஜ்ஜியத்திற்கு திப்புசுல்தான் “சல்தனத்தே குதாதாத்” (இறையாட்சி) என பெயரிட்டார். புலிச்சின்னம் கொடியிலும், கீழே அல்லாஹ்வே ஆண்டவன் என்ற வாசகமும் பொறிக்கப்பட்டன.
திப்பு சுல்தான் அடிக்கல் நாட்டிய அணை
1791 தகி மாதம் 29 ம் தேதி திங்கட்கிழமை காலை திப்புசுல்தானே காவிரியின் குறுக்கே அணை ஒன்று கட்ட அடிக்கல் நாட்டினார். அந்த சாசனக்கல் இன்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைச்சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. சரியாக 120 ஆண்டுகளுக்கு பின் அதே இடத்தில் பிரிட்டிஷ் அரசு இந்த அணையை கட்டியது 1789 டிசம்பர் 28 லிருந்து 1790 மார்ச் வரை திருவிதாங்கூர் முற்றுகை. இதனால் காரன்வாலிஸ் பிரபு மைசூர் மீது போர் பிரகடனம் செய்தான் கோரப் புரட்சி ஒடுக்கப்பட்டது.
போர்க்களங்களில் திப்பு மைசூர் ராஜ்ஜியத்தை பல திசைகளில் தாக்க ஆங்கிலேயர் போர் முறையை வகுத்தனர் மேஜர் ஜெனரல் வில்லியம் மெடோஸ் ஐ பவானிக்கு அருகில் திப்பு வென்றார் கிழக்கு பகுதியில் போர் தொடுத்து கர்னல்கெல்லியும் தோற்றான் ஆங்கிலப்படையை விரட்டிக் கொண்டே திப்பு பாண்டிச்சேரி வரை விரைந்து சென்றார் 1791 பிப்ரவரியில் சதுரங்கப்பட்டினம் முற்றுகை ஆரம்பம்
1792 பிப்ரவரி 26 ம் தேதி செய்த ஒப்பந்தம் மார்ச் 19 ம் தேதி கையெழுத்தானது இதன்படி மைசூர் ராஜ்ஜியத்தின் பாதி நிஜாம், மராட்டியர் ஆங்கிலேயர் மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. 1கோடியே 65 லட்சம் வராகனும் 10 வயதான அப்துல் காலிக் சுல்தான் 8 வயதான மொய்சுதீன் சுல்தான் இருவரையும் ஆங்கிலேயர் பிணையாகப் பெற்றனர் மீதி 1 கோடியே 35 லட்சம் வராகனும் 3 தவணையில் தர ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் திண்டுக்கல், கோவை, சத்தியமங்கலம், தேங்கணிக்கோட்டை, சேலம், பெல்லாரி, கிருஷ்ணா நதியொட்டிய பகுதிகள் எதிரிகள் வசமாயின. 1794 பிப்ரவரி 29 ம் தேதி தேவனஹள்ளியில் மூன்றாவது தவணை செலுத்தி விட்டு தமது புதல்வர்களை திரும்பப் பெற்றார். இப்போருக்கு பின்னர் திப்பு கதீஜா ஜமானி பேகம் என்ற பெண்ணையும் மணந்து கொண்டார். நான்கு மனைவியருக்கும் குழந்தைகள் உண்டு.
1796 லிருந்து 1798 மத்தியில் வரை பிரெஞ்சு தளபதி மாவீரன் நெப்போலியனுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார் திப்பு பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்களுக்கு சமமான படைபலம் திப்புவிடம் இருந்தது. பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியும், மைசூர் அரண்மனையில் முக்கிய பொறுப்பில் உள்ள நம்பிக்கை துரோக நயவஞ்சகர்களின் சூழ்ச்சியும் திப்புவை பலவீனமாக்கின. ஆஞ்சி சாமய்யா, கிருஷ்ணராவ், திருமல்ராவ், மீர்சாதிக், கமருத்தீன் போன்ற முக்கிய மந்திரிகளின் துரோகம் அம்மாவீரன் சரிவுக்கு காரணமாக அமைந்தது. தியாகதீபம் அணைந்தது
1799 மே 3ம் தேதி கோட்டை செப்பனிடும் வேலையும் அதே நேரம் நயவஞ்சக நரிகளின் துரோகத்தின் உச்சமும் நடந்தது. 1799 மே மாதம் 4ம் தேதி நடுப்பகலில் சாதாரண சிப்பாயின் உடையில் வெறும் 50 பேர்களுடன் திப்புசுல்தான் வடமேற்கு பகுதியில் சுட்டுக் கொண்டே முன்னேறினார். அவ்வேளையில் இந்த மண்ணின் புண்ணிய மைந்தனின் நெற்றி பொட்டில் குண்டு பாய்ந்தது.கத்தியை இறுகப் பற்றியபடியே அந்த வீரமைந்தன் தன் தாயக விடுதலைக்காக வீரசுவர்க்கம் புகுந்தார்.ஆம் உயிர் பிரிந்தது.
திப்பு சுல்தானின் குடும்பம்
குடும்ப வாழ்வில் ருக்கையாபானு, ஆற்காடு ரோஷன்பேகம், புரந்தி பேகம், கதீஜா ஜமானி பேகம் என நான்கு மனைவியர், நால்வருக்கும் குழந்தைகள் உண்டு. திப்புவின் புதல்வர்கள் ஃபத்தே ஹைதர், அப்துல் காலிக், முஹ்யித்தீன், மொய்சுதீன்கான், முஹம்மது யாசீன், முகம்மது சுபான், ஷ்ருக்கில்லாஹ், சிர்ருதீன், குலாம் முஹம்மது, குலாம் ஹமீது, முனீருத்தீன், ஜமீயுத்தீன் ஆகிய பன்னிருவர். திப்புவின் புதல்விகள் பீவி பேகம், அஸ்முலுன்னிஸா பேகம், உமருன்னிஸா பேகம், பாத்திமா பேகம், பதீயுன்னிஸா பேகம், நூருன்னிஸா பேகம், குலூமா பேகம், கதீஸா பேகம் ஆகிய எட்டுபேர்.
ஆட்சி மாண்பும், படைபலமும்
திப்பு சுல்தான் தனது அரசு தர்பாரை ஒரு பார்லிமெண்ட் மாதிரியே நடத்தினார் படை, வியாபாரம், விவசாயம், மதம் என தனித்தனி இலாக்காக்களாக பிரித்து இருந்தார். நீதி வழங்க மொத்தம் 99 கோர்ட்டுகள் இருந்தன அனைத்து மதத்தவரும் அவரவர் மத சம்பிரதாய சட்டப்படி அவரவர்களே நீதி வழங்கினர். ஒவ்வொரு ஊருக்கும் காஜி, கதீப், காவல்நிலையம், ரகசிய உளவு இலாகா இருந்தன. எட்டு பாகமுள்ள அரசியல் சட்டப்புத்தகம் ‘கிதாபேதொஹபதுல் முஜாஹிதீனை’ (புனித வீரர்களின் வெற்றி) திப்பு இயற்றினார்.
இராணுவம்
திப்பு சுல்தான் வசம் மிகப்பெரிய ராணுவம் இருந்தது. மூன்று லட்சத்து இருபதாயிரம் வீரர்கள் இதர தனிப்பட்ட ராணுவமும் போலிஸும் இருந்தன யானைகள் 900, ஒட்டகங்கள்6000, 25000 அரபிக்குதிரைகள், நான்கு லட்சம் மாடுகள், மூன்று லட்சம் துப்பாக்கிகள், இரண்டு லட்சத்து இருபத்து நாலாயிரம் வாட்கள், 929 பீரங்கிகள் மற்றும் ஏராளமான வெடிமருந்து குவியல்கள் இருந்தன.
கப்பற்படை
கடற்படையில் 60 பீரங்கிகள் ஏற்றக்கூடிய ஒரு கப்பல், 30 பீரங்கிகள் ஏற்றக்கூடிய 30 கப்பல்கள், இரண்டு பீரங்கிகள் ஏற்றக்கூடிய 20 படகுகள் இருந்தன அரேபியாவில் ஜித்தா வளைகுடாவில் உள்ள மஸ்கட் துறைமுகம் இந்திய மேற்கு கூரையில் உள்ள கச்சு நவகார் ஆகிய துறைமுகங்களில் கிட்டங்கிகளை திப்பு நிறுவினார். அணிவகுத்து போரிடும் 72 கப்பல்கள் அவரிடம் இருந்தன 72 பீரங்கிகளும் கொண்ட ஒரு கப்பலில் 24 ராத்தல் பீரங்கிகள் 30 ம், 18 ராத்தல் பீரங்கிகள் 30ம், 9 ராத்தல் பீரங்கிகள் 9ம் இருந்தன 40 கப்பல்களில் 10,520 கடற்படை வீரர்கள் இருந்தனர்.
திப்பு கடற்பயிற்சி பள்ளியும் கப்பல் செப்பனிடும் துறையும் நிறுவினார். இவற்றிற்கான செலவு ஓராண்டில் 1,82,400 பவுன் (சுமார் 23,84,000 ரூபாய்)ஆகியது. (தகவல்: மைசூர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் செல்வராஜ், 24 மார்ச் 1984 ல் நடந்த தென்னிந்திய வரலாற்று பேரவைக் கூட்ட சொற்பொழிவில்) ஆங்கிலேயரிடம் இல்லாத நவீன ஏவுகனைகள் அந்நாளிலேயே திப்புவிடம் மட்டுமே இருந்தன நவீன ராக்கெட்டின் முன்னோடி திப்பு சுல்தான்.
சதவீத அடிப்படையில் மான்யம்
மைசூர் ராஜ்ஜியத்தில் 90 சதவீதம் ஹிந்துக்களும், 10 சதவீத முஸ்லீம்களுமே வாழ்ந்தனர். ஒரே ஆண்டு மட்டும் ஹிந்து கோயில்களுக்கும் தேவஸ்தானங்களுக்கும் 1,93,959 வராகன்களும் பிராமண மடங்களுக்கு 20,000 வராகன்களும் ஆனால் முஸ்லிம் ஸ்தாபகங்களுக்கு 20,000 வராகன்களுமே ஆக மொத்தம் 2,33,959 வராகன்கள் சர்க்கார் கஜானவிலிருந்து வழங்கப்பட்டுள்ளன. சதவிகித அடிப்படையில் மான்யம் வழங்கிய முதல் மன்னன் திப்பு சுல்தான். ஆதாரம் (கி.பி.1798 MYSORE GAZETER பக்கம் 38.VOL IV 1929)
சீர்திருத்தம்
மலபார் பகுதியில் பெண்கள் மேலாடையின்றி இருந்த பழக்கத்தை மாற்றி உயிர் உயர் மானங்காக்க மேலாடை அணியும் பழக்கத்தை உருவாக்கி குடகு பகுதியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் மணந்து கொள்ளும் பழக்கத்தைத் தடுத்தார். சட்டம் இயற்றி சீர்திருத்தம் செய்தார். திப்புசுல்தான் மைசூரில் நரபலியையும் கோவில்களின் தேவதாசி முறையையும் ஒழிக்கச் சட்டம் போட்டார் மதுவிலக்கை முழுமையாக அமலாக்கினார் மத ஒற்றுமையும் மதுவிலக்கும் திப்புசுல்தானின் இருகண்களாக இருந்தன
தொழில் வளர்ச்சி
அரிசி, சந்தனம், செம்பு, குதிரை, முத்து, செம்மணிக்கல், பட்டு இவையனைத்தும் ஏற்றுமதி செய்ய மிகவும் கவனம் செலுத்தினார் சந்தன அத்தர், எண்ணெய் வடிதொழிலைத் திப்புசுல்தான் துவங்கினார் நாடு முற்றிலும் விவசாயம் செழித்திடச் செய்தார்.
தொழிற் புரட்சி  
கடிகாரம், கண்ணாடி, பீங்கான் தயாரிக்கின்ற தொழிற்சாலைகளை வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் நிறுவினார் மஸ்கட்டிலிருந்து பட்டுப் பூச்சிகளை வரவழைத்து பட்டு உற்பத்தியை உண்டாக்கினார் கூட்டுறவுப் பண்டக சாலைகளை அமைத்து மக்களுக்கு மலிவு விலையில் பண்டங்கள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
திப்புவின் மானியம் பெற்ற திருக்கோயில்கள்
§  கி.பி.1786 மேலக்கோட்டை நரசிம்மசாமி கோயில் தங்க, வெள்ளி, ஆராதனைப் பாத்திரங்கள், பாரசீக மொழிப்பட்டயம், 12 யானைகள் பரிசும் வழங்கினார் நாராயணசாமி கோவிலுக்கும், கந்தேஸ்வரசாமி கோவிலுக்கும் ரத்தின ஆராதனைத் தட்டுக்கள் வழங்கினார்.*நஞ்சன் கூடுவில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்திற்கும் மரகதலிங்கம் வழங்கினார் அதன் பெயர் இன்றும் “பாதுஷாலிங்கம்” என்று வழங்கப்படுகின்றது.
§  குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கும் அக்கோவிலைச் சுற்றியுள்ள நிலவரிவசூல் செய்யும் உரிமையை தானம் வழங்கினார் கி.பி.1790 ல் காஞ்சிபுரம் கோவிலுக்கும் 10,000 வராகன் நன்கொடை திப்புசுல்தான் வழங்கினார்.
§  மைசூரில் உள்ள தொன்னூரில் இராமனுஜகுளம் தூர்வாரப்பட்டு செப்பனிடப்பட்டதும் திப்புவால்தான். பர்பாபுதனன்கிரி என்ற தத்தாத்ரீயபீடம் மடத்திற்கும் இருபது சிற்றூர்கள் இனாமாகவும் புஷ்பகிரி மடத்திற்கு இரண்டு கிராமங்கள் மானியமாகவும் திப்பு வழங்கினார்
§  சிருங்கேரி மடத்தில் ஹைதர் அலியின் சனதுகள் மூன்றும் திப்பு சுல்தானின் சனதுகள் முப்பதும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
§  கி.பி.1793 ல் ஜகத்குரு சங்கராச்சாரியார் சச்சிதானந்த பாரதிக்கு திப்புசுல்தான் எழுதிய கடிதம் இன்றும் மைசூர் நூலகத்தில் உள்ளது. இந்நூலகத்தில் ஹிந்துக் கோயில்கள் பலவற்றுக்கு திப்பு வழங்கிய மானியங்கள் பற்றிய அரசு ஆணைகள் பல உள்ளன.
§  வாழ்நாள் முழுவதும் போராடியே வாழ்ந்த திப்புசுல்தான், தரியாதெளலத் அரண்மனையும், பூங்காவும், மொராக்கோ அரபிகளைக் கொண்டு பெங்களூரில் பிரம்மாண்டமான பள்ளிவாயிலும், பலவிதத் தோட்டங்களும், கட்டிடங்களும், பாலங்களும் கட்டினார். ஸ்ரீரங்கப்பட்டினத்தில் கலாசாலை ஒன்றும் நிறுவினார்.
கிட்டத்தட்ட மாவீரன் திப்பு மறைந்து 20 ஆண்டுகளில் முழு இந்தியாவும் ஆங்கிலேயர் வசமானது.

 நன்றி : விக்கிபிடிய 

செவ்வாய், 21 ஜூன், 2011

பிரபஞ்சத்தை உருவாக்கியது !......

இயற்பியல்ன் கோட்பாடுகளின் விளைவுகளே காரணம் என்று கூறியுள்ளார் உலகப் புகழ் பெற்ற இங்கிலாந்து இயற்பியலாளர் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்.
Muscular dystrophy எனும் உடலியல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரான ஹாக்கிங், விண்வெளியியல் ஆய்வுக்கு ஆற்றிய சேவை மிகப் பெரியது. பிளாக் ஹோல்ஸ் குறித்த இவரது ஆய்வு மிகப் பெரியது. இவர் எழுதிய 'த பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்' என்ற புத்தகம் மிகப் பிரபலமானது. பிரபஞ்சம் உருவானதற்குக் காரணமான பிங் பாங் குறித்த கருத்தையும் மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தையும் இதில் அவர் விளக்கியுள்ளார்.இங்கிலாந்தின் சன்டே டைம்ஸ் இதழின் சிறந்த புத்தக வரிசையில் தொடர்ந்து 237 வாரங்கள் முதலிடத்தில் இருந்து சாதனை படைத்தது இந்தப் புத்தகம். தற்போது ஹாக்கிங் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அது இந்த பிரபஞ்சததை கடவுள் உருவாக்கவில்லை. மாறாக, இயற்பியலின் விதிகளே பிரபஞ்சம் உருவாகக் காரணம் என்று கூறியுள்ளார்.இயற்பியலின் தவிர்க்க முடியாத விதிகளின் விளைவுகளால்தான் இந்த பிரபஞ்சம் உருவானதாக தனது சமீபத்திய 'தி கிரான்ட் டிசைன்' (The Grand Design) என்ற நூலில் எழுதியுள்ளார் ஹாக்கிங்.

இதுகுறித்து ஹாக்கிங் கூறுகையில், இந்த பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பு அவ்வளவு பெரிய பிரமாண்டமான வெற்றிடம் இருந்தது. எனவே யாரும் வந்து பூமியை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுவாகவே தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளது இந்த பிரபஞ்சம். இது முற்றிலும் இயற்பியல் சார்ந்ததே. சுருக்கமாக சொன்னால் இந்த பிரபஞ்சம், சுயம்புவாக உருவானது. இதை உருவாக்க கடவுளுக்கு அவசியம் இல்லை. நமது பிரபஞ்சத்தின் அன்றைய நிலை, இன்றைய நிலை, நாம் இந்த பிரபஞ்சத்தில் வாழ முடிவது என அனைத்துக்குமே ஏதாவது ஒரு காரணம் உள்ளது. எதுவுமே மர்மம் இல்லை. எல்லாமே அறிவியல் சார்ந்தது.

பிரபஞ்சம் தானாக உருவாகவில்லை, அதை உருவாக்கியவர் கடவுள்தான். கடவுளின் சக்திதான் பிரபஞ்சத்தை உருவாக்கியது என்பது தவறு, அது சாத்தியமில்லை. கடவுள் வந்து தொட்டுக் கொடுத்து 'ஏ பிரபஞ்சமே உருவாகு' என்று கூறினார் என்று சொல்வது அபத்தமானது என்று கூறியுள்ளார் ஹாக்கிங். அதேசமயம், 1998ல் ஹாக்கிங் எழுதிய 'த பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்' நூலில், பூமியின் உருவாக்கலில் கடவுளுக்கும் பங்கு இருக்கலாம் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில், பிரபஞ்சத்தின் முழுமையான வரலாற்றை நாம் பார்க்கும்போது, அது முற்றிலும் மனிதகுலத்தின் வெற்றியாக கூறிக் கொள்ள முடியும். அதில் கடவுளுக்கும் ஒரு இடம் இருக்கலாம் என்று கூறியிருந்தார் ஹாக்கிங்.

ஆனால் தற்போது முற்றிலும் இது இயற்பியல் சார்ந்த நிகழ்வு என்று அடித்துக் கூறியுள்ளார் ஹாக்கிங்.தனது புதிய புத்தகத்தில் அவர் கூறுகையில், பிக் பாங் காரணமாக சூரிய குடும்பமும், கோள்களும் உருவாகின. பூமியும் உருவானது. இதற்குக் காரணம், இயற்பியலின் விதிகளால் ஏற்பட்ட விளைவுகளே. இங்கு கடவுளுக்கு எங்குமே இடமில்லை. முற்றிலும் அறிவியல் சார்ந்த நிகழ்வு இது.

என் முன் இரண்டு கேள்விளை வைக்கிறேன். முதல் கேள்வி, நம்மால் புரிந்து கொள்ள முடியாத காரணங்களுக்காக கடவுள் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கினாரா என்பது.2வது கேள்வி, அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் பிரபஞ்சம் உருவானதா என்பது. இதில் நான் 2வது கேள்வியையே ஆதரிக்கிறேன். நீங்கள் விரும்பினால் அறிவியலின் கோட்பாடுகளை 'கடவுள்' என்று கூறிக் கொள்ளலாம். அதேசயம் இதைத் தவிர வேறு எந்த கடவுளும் பிரபஞ்சத்துக்கு உரிமை கொண்டாட முடியாது என்பது எனது கருத்து என்கிறார் ஹாக்கிங்.

இருப்பினும் பல விஷயங்கள் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. குறிப்பாக பிளாக் ஹோல்கள். இந்த 'இருண்ட சக்தி' பிரபஞ்சம் உருவானபோது ஏற்பட்டதா அல்லது பிரபஞ்சம் உருவானபோது அழிந்து போனதின் மிச்சமா என்பது இதுவரை விளங்கவில்லை. தற்போதைக்கு பிரபஞ்சத்தின் வரலாறு குறித்து உலக அளவில் விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ள ஒரே முடிவு பிக் பாங் தியரி மட்டுமே. மிகப் பெரிய வெடிப்புப் பிரளயத்தைத் தொடர்ந்து இந்த பிரபஞ்சம் உருவானதாக இந்த பிக் பாங் தியரி கூறுகிறது. 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பேரண்ட வெடிப்பு நடந்ததாக கடந்த ஆண்டு கணித்துக் கூறப்பட்டது.

தற்போது வெளியாகியிருக்கும் ஹாக்கிங்கின் நூலும் பிரபஞ்ச வரலாறு குறித்த புதிய பார்வைக்கு வித்திடும் என்கிறார்கள்.அமெரிக்காவைச் சேர்ந்த இயற்பியலாளர் லியோனார்ட் லோடினோவுடன் இணைந்து இந்த நூலை எழுதியுள்ளார் ஹாக்கிங். இது செப்டம்பர் 9ம் தேதி வெளியாகிறது.

ஞாயிறு, 19 ஜூன், 2011

3-வது உலக போர்


குவைத் நாட்டின்மீது சதாம் ஹூஸைன் ஆக்கிரமிப்பு நடத்தியபோதும் சரி, சமீபத்தில் நியூயார்க் கட்டிடங்கள் மீது ஓஸாமா -பின்- லேடன் தாக்குதல் நடத்தியபோதும் சரி, உலகமக்கள் பரபரப்பாகப் பேசியது ஒருவரைப் பற்றித்தான்.அவர்தான் நாஸ்டர்டாமஸ். 

அவர் சொன்ன நிகழ்ச்சி நடந்தாகிவிட்டது.அவர் சொன்னபடியே மீண்டும் ஒரு உலக மகாயுத்தம் மூண்டுவிடுமா ?இதுதான் உலக மக்களின் திகிலுடன் கூடிய எதிர்பார்ப்பு. 400 ஆண்டுகளுக்கு முன்பே எவ்வளவு துல்லியமாக்க் கணித்துள்ளார் அந்த மனிதர்.  
நம்மூர் செய்தித்தாள்கள் நீல டர்பன் கட்டிய நபர் 'என்ற அடையாளத்துடன் நாஸ்டிரடாமஸ் சொன்ன பாடலை பிரசுரம் செய்தன. எங்கிருந்து வந்தது அவருக்கு இவ்வளவு ஆற்றல், என்னென்ன சொல்லியிருக்கிறார், அவர்,இனி எதிர்காலத்தில் என்னென்ன நிகழப்போகிறது


இந்தியா- பாக் இடையே போர் வருமா?


ஒரு உலக மகாயுத்தத்தை இந்த 2 நாடுகளும் தான் ஆரம்பித்து வைக்க போகின்றன என்ற அதிர்ச்சி தகவல்களை அவர் எப்போதோ சொல்லி விட்டு போயிருக்கிறார்.


2006ம் ஆண்டிலிருந்தே இந்தியா பல சோதனைகளை சந்திக்க தொடங்கும் பட்சத்தில் ஒரு உச்சகட்ட காட்சியாக 2011 அல்லது 2012ல் 3-வது உலக போர் ஏற்படும் என்கிறார்.


இந்த போர் இடைப்பட்ட எந்த ஆண்டில் வேண்டுமானாலும் நிகழலாம்!. மக்களின் அப்போதைய இறை பக்தியை பொறுத்திருக்கிறது என்பதையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.


இந்தியா-பாகிஸ்தான் என எதிரும் புதிருமான இந்த போரில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, சவூதி அரேபியா, சிரியா, இஸ்ரேல், ஜெர்மனி, பிரான்ஸ், லெபனான், ஈரான், ஆஸ்திரேலியா என உலகின் 21 நாடுகள் முக்கிய களமிறங்கும் என்கிறார் அவர்.


வானத்தில் சனி-ராகு கிரகங்களின் புதிய மாற்றத்தால் இந்தபோர் ஏற்படும். போர் சமயத்தில் அணு ஆயுத வீச்சுகளால் கடல் அலை 100 அடிக்கு எழுந்து ஓயும். சுமார் 100 கோடி பேர் மரணத்தை தழுவினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார் நாஸ்டர் டாமஸ்.


இதன் பின்னர் 2026 வாக்கில் உலகின் நம்பர் 1 நாடாக இந்தியாவும், 2-வது நாடாக சீனாவும் விளங்கும் என்று கணித்திருக்கிறார் நாஸ்டர் டாமஸ்.


போரை பொறுத்த வரை இந்தியாவில் பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களும் எல்லை பகுதிகளும் பாதிக்கப்படும் என்பதையும் அவர் சொல்லியிருக்கிறார்.


இந்தியர்கள் 2006க்கு பிறகு தங்கள் வாழ்க்கையில் பல வகையான மாற்றங்களை காண்பார்கள்.


மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் சிக்கி திணறுவார்கள். இறை பக்தி குறையும். அரசியலில் பற்பல மாற்றங்கள் நிகழும். உண்மை தோல்வியை தழுவும். பொய் வெற்றி பெறும். மக்கள் அலை பாய்ந்து திரிவார்கள்.


இத்தகைய சுமார் 20 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு இளைய தலைமுறை குழந்தைகளால் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். பெற்றோர்கள் மற்றும் வயதானவர்களால் அவர்கள் அறிவை புரிந்து கொள்ள முடியாமல் ஆச்சர்யப்பட்டு போவார்கள்.


இந்தியா மிக நவீனமாகி விடும். பணம் கொழிக்கும். அனைவரது வாழ்க்கையும் மிக நவீன நாகரீகமடையும். மேலை நாடுகளை போன்ற வாழ்க்கை தரத்திற்கு மாறிவிடுவார்கள். உலக அரங்கில் இந்தியா தலை சிறந்து விளங்கும்.


இப்படியெல்லாம் இந்தியா பற்றி ஜாதக பலனை சொல்லியிருக்கும் நாஸ்டர் டாமஸ் மேற்கண்ட 20 ஆண்டு கால போராட்டத்தை ஒவ்வொருவரும் எப்படி சமாளிப்பது என்ற ஆலோசனையையும் வழங்கியிருக்கிறார்.


ஒரு நாட்டில் பாவசெயல்கள் பெருகும் போது அந்த நாட்டின் அதற்குரிய சிக்கலையும், கஷ்டங்களையும் அனுபவிப்பார்கள். எனவே, பாவசெயல் செய்யாது அன்புடன் இருங்கள். அவரவர் வீட்டில் தினமும் இறைவனை நன்றாக பிரார்த்தனை செய்யுங்கள்.


இத்தகைய பிரார்த்தனை செய்யும் போது மட்டும்தான் மனம் தெளிவடையும். நல்ல சிந்தனை பிறக்கும். நெஞ்சு தைரியம் உண்டாகும். நீங்கள் இதை செய்யாவிட்டாலும் இறை சக்தி மிகப்பெரியது. அது செய்ய வைக்கும் என்கிறார் அவர்


thank for




[Pic+Copy+of+text.jpg]






[Pic+India.jpg]




படிப்பதற்கான புத்தகங்கள்:

இந்தியர்கள் படைத்த - படைத்துக் கொண்டிருக்கும் சாதனைகள்

கடந்த, பத்தாயிரம் ஆண்டுகளில், எந்த நாட்டின் மீதும் இந்தியா போர் தொடுக்கவில்லை.
கணக்கிடுவதற்கு மிகத் தேவையான, "பூஜ்ஜியத்தை' கண்டுபிடித்தது இந்தியா; கண்டுபிடித்தவர் ஆர்யபட்டர்.
கிறிஸ்துவுக்கு, எழுநூறு ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் தட்சசீலத்தில், உலகிலேயே முதன்முதலாக பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து, பத்தாயிரத்து, 500 மாணவர்கள் இங்கு பயின்றனர். அறுபதுக்கும் மேற்பட்ட பாட வகைகள் கற்பிக்கப்பட்டன.
கிறிஸ்துவுக்கு, நானூறு ஆண்டுகளுக்கு முன், நாளந்தா பல்கலைக் கழகம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. இது, கல்வி உலகுக்கு பெரும் வழிகாட்டியாக அமைந்தது.
 ஐரோப்பிய மொழிகள் அனைத்திற்கும் தாய் மொழியாக அமைந்தது, இந்திய மொழியான சமஸ்கிருதம். கம்ப்யூட்டர், "சாப்ட்வேர்' தயார் செய்ய மிகவும் ஏற்ற மொழி சமஸ்கிருதம் தான் என, அமெரிக்கப் பத்திரிகையான, 
"போபர்ஸ், 1987 ஜூலை இதழில் குறிப்பிட்டுள்ளது.
ஆயுர்வேதம் தான் மனித இனத்திற்கு ஆதியில் தெரிந்த மருத்துவ முறை. இதை, இந்தியாவின் சரகர் என்பவர்தான் கண்டு பிடித்து முறைப்படுத்தினார். இன்று, உலகம் முழுவதும் ஆயுர்வேத மருத்துவ முறை புத்துயிர் பெற்று வளர்ந்து வருகிறது.
 
பிரிட்டிஷ்காரர்கள் இங்கு ஊடுருவும் முன், இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடாகத் திகழ்ந்தது.
 "நாவிகேஷன்' - என ஆங்கிலத்தில் சொல்லப்படும், கப்பல் - படகு செலுத்தும் கலையை 6,000 ஆண்டுகளுக்கு முன், சிந்து நதியில் நிகழ்த்திக் காட்டியவர்கள் இந்தியர்களே. "நவ்காத்' எனும் சமஸ்கிருத சொல்லே ஆங்கிலத்தில், "நாவிகேஷன்' என்றானது. ஆங்கிலத்தில், "நேவி' என, கடற்படையைக் குறிக்கும் சொல், "நூவ்' என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்தே வந்தது.
 
சூரியனை பூமி சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நாட்கள் எத்தனை என்பதை, ஐரோப்பிய வான சாஸ்திரி ஸ்மார்ட் கண்டுபிடித்து கூறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அதாவது, கி.பி, 5ம் நூற்றாண்டிலேயே இந்தியாவின் பட்டாச்சாரியர் கண்டுபிடித்து விட்டார். மிகச் சரியாக 365.258756484 நாட்களாகிறது என்பதை பட்டாச்சாரியர் கண்டுபிடித்தார்.
 
கணித சாஸ்திரத்தில், "பை' என்பதன் மதிப்பைக் கணக்கிட்டவர் புதையனார் என்ற இந்தியரே. ஐரோப்பிய கணித மேதைகள், "பித்தகோரஸ் தேற்றத்'தை, விளக்குவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது, 6வது நூற்றாண்டிலேயே விளக்கினார் புதையனார்.
 கணிதத்தில் அல்ஜிப்ரா, டிரிக்னாமெட்ரி, கால்குலஸ் ஆகியவை இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. குவாட்ராட்டிக் சமன்பாடுகள், ஸ்ரீதராச்சார்யா என்ற இந்தியரால், 11ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
 
கம்பியில்லா தகவல் தொடர்பை, இந்தியாவின் ஜகதீஷ் போஸ் தான் முதன் முதலில் கண்டுபிடித்தார் - மார்கோனி (ரேடியோ கண்டுபிடித்தவர்) அல்ல என்று அமெரிக்க நிறுவனமான ஐ.இ.இ.இ., அடித்துக் கூறுகிறது.
 செஸ் விளையாட்டு, இந்தியாவிலேயே முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சந்திரஞ்சா (சதுரங்கம்), அஷ்டபாதா என, இரு பெயரில் அழைக்கப்பட்டது.
 
சிசேரியன், கேட்ராக்ட், செயற்கைக் கால், எலும்பு முறிவு, பித்தப்பைக் கல், மூளை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை, 2,600 வருடங்களுக்கு முன்பே, செய்து இருக்கிறார் சுஷ்ருதன் என்ற இந்தியர். அறுவை சிகிச்சைக்கு முன் கொடுக்கப்படும் மயக்க மருத்து சிகிச்சையையும் செய்து இருக்கிறார். 125க்கும் மேற்பட்ட அறுவை 
சிகிச்சைக்கு கருவிகளையும் பயன்படுத்தி உள்ளார்.
— இப்படி எல்லாவற்றிலும் சரித்திரத்தில் நம்பர் ஒன் ஆகத் திகழ்ந்த இந்தியர்கள், இன்றும் நம் பெருமையை உலகம் முழுவதும் நிலைநாட்டி வருகின்றனர். 
உதாரணத்திற்கு: 

அமெரிக்காவில் உள்ள டாக்டர்களில், 38 சதவீதம் இந்தியர்கள்; 

விஞ்ஞானிகளில், 12 சதவீதம் இந்தியர்கள்; 

விண்வெளி துறையான, "நாசா'வில், 36 சதவீதம் இந்தியர்கள்;

 பில்கேட்சின், "மைக்ரோ சாப்ட்' நிறுவனத்தில், 34 சதவீதம் இந்தியர்கள்; 

கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம்.,மில் 28 சதவீதம் இந்தியர்கள்; 

அதே போல, "இன்டெல்' கம்ப்யூட்டர் நிறுவனத்தில், 17 சதவீதம் இந்தியர்கள்; 

"சிராக்ஸ்' நிறுவனத்தில், 13 சதவீதம் இந்தியர்கள்; 

அமெரிக்காவில், 35 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்...
இவை சிறு எடுத்துக்காட்டு தான்; அரசியல், ஜாதி, மதம் இவற்றை ஒதுக்கி வைத்து, நம் மக்கள் தம் அறிவுத் திறனை சரியான பாதையில் செலுத்தினால், நம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை தானே!








நன்றி " தினமலர் 

வெள்ளி, 17 ஜூன், 2011

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு திட்டத்தை பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கேள்வி: இத்திட்டத்தின் அதிகபட்ச திட்ட மதிப்பீடு எவ்வளவு?

பதில்: உற்பத்தி பிரிவிற்கு 25 லட்சம் ரூபாய். சேவை பிரிவிற்கு 10 லட்சம் ரூபாய்.
கேள்வி: நிலத்தின் மதிப்பு/விலை, திட்ட மதிப்பிட்டில் சேருமா?
பதில்:

பயனாளிகளின் வகை
மான்ய உதவி அளவு (திட்ட மதிப்பில்)
பகுதி (திட்டம் அமையுமிடம்)
நகர்
புறம்
கிராமப்
புறம்
பொதுப்பிரிவு
15%
25%
சிறப்பு (ஷெட்யூல்ட்பிரிவு, மலை ஜாதியினர், மிகவும்பிற்படுத்தப்
பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள்ராணுவத்தினர், உடல்ஊனமுற்றோர், வடகிழக்கு மாநிலங்கள், மலைவாழ் மற்றும், எல்லைப்பகுதியினர்
25%
35%
கேள்வி: திட்ட மதிப்பீட்டில் உள்ளவை என்னென்ன?
பதில்     :    அசையா சொத்து முதலீட்டு செலவுக்கான கடன், உற்பத்தி செலவுக்கு ஒரு முறைக்கான முதல், பொதுப்பிரிவில், திட்ட மதிப்பில் பத்து சதம் சொந்த முதலீடு, நலிவடைந்தோர் என்றால் திட்டமதிப்பில் ஐந்து  சதம் சொந்த முதலீடு.
கேள்வி : பயனாளிகள் யார் யார்?
பதில்     :     தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள், சுயஉதவிக்குழுக்கள், 
கேள்வி: நிதி உதவி அளிக்கும் நிறுவனங்கள் எவை?
பதில்     : 27 பொதுத்துறை வங்கிகள், மண்டல கிராம வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மாநில கமிட்டியின் அனுமதியோடு செயல்படும் தனியார் வணிக வங்கிகள்
கேள்வி: முதலீட்டு செலவுக்கடன் / பணக் கடன் வரம்பு அளவு எப்படி உபயோகப்படுத்தப்படுகிறது?
பதில்    :  நடைமுறை செலவு மூலதனம் குறைந்தபட்சம் மூன்று வருடத்துக்குள் 100சதவீதம்  பணக்கடன் அளவை எட்டவேண்டும். கடன் அனுமதிக்கப்ட்ட அளவில் 75 சதவீதத்திற்கு குறையாமல் பயன்படுத்த வேண்டும்
கேள்வி: பயனாளி, திட்டத்திற்கான விண்ணப்பத்தினை எங்கு சமர்பிக்க வேண்டும்?
பதில்  : பயனாளி தனது விண்ணப்பத்தினை அருகிலுள்ள கதர்கிராம         தொழில் ஆணையம் / கதர்கிராம தொழில் வாரியம்/ மாவட்ட தொழில் மையம் அல்லது வங்கிகளில் (குறைந்தது 2-3 வார தொழில் முனைவோர் பயிற்சி எடுத்தோர்) கொடுக்கலாம். மேலும் இதுகுறித்த அலுவலக முகவரிக்கு www.pmegp.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
கேள்வி: கிராமத் தொழில் என்றால் என்ன?
பதில்   : கிராமத்தில் அமைந்திருக்கும் எல்லா கிராமத் தொழில்களும் (சேர்க்கப்பட முடியாத தொழில்கள் தவிர) மின்சாரத்தை பயன் படுத்தியோ, பயன்படுத்தாமலோ உற்பத்திசெய்யும் பொருட்கள் அல்லது செய்யும் சேவைகள், அதில் செய்யப்படும் ஒரு தொழிலாளருக்கான அசையா முதலீட்டுத் தொகை, சமவெளியில் ஒருலட்சம் ரூபாய் மற்றும் மலைப் பகுதியில் 1.5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் தொழில்களை கிராமத்தொழில் எனப்படுகிறது.
கேள்வி: கிராமப்பகுதி என்றால் என்ன?
பதில் : மாநில வருவாய்துறையின் அட்டவணைப்படி கிராமம் என்று கூறப்படும் பகுதிகள் (மக்கள் தொகை கருதப்படாது).   நகர்புறங்கள் என குறிப்பிடப்பட்டாலும், அதன் மக்கள்தொகை 20,000க்கு மிகாமல் இருந்தால், அதுவும் கிராமம் என்றே கணக்கிடப்படும்.
கேள்வி: வயது வரம்பு என்ன?
பதில்   : 18 வயதுக்கு மேலுள்ளவர் இத்திட்டத்தில் பங்கேற்று, நிதி உதவி பெறத்தகுதி உடையவர்
கேள்வி: இத்திட்டத்திலுள்ள முக்கியமான நிபந்தனைகள் யாவை?
பதில்  : தொழில் தொடங்கவுள்ள பகுதி, கிராமப்புற பகுதி என்ற தகுதியை பெற்றிருக்க வேண்டும். ஒரு நபரின் உற்பத்திக்கான முதலீடு, தொழில் முனைவோரின் முதலீடு, சேர்க்கப்படாத தொழில்கள் பட்டியல் ஆகியவை முக்கியமாக கவனிக்க வேண்டியவை. தொடங்கப்படும் தொழில் புதிய திட்டமாக இருத்தல் வேண்டும்.
கேள்வி: தொழில் முனைவோர் பயிற்சி அவசியமா?
பதில்:வங்கிலிருந்து முதல் தவணை கடன் தொகை கொடுப்பதற்கு முன் பயனாளி 2-3 வார தொழில் முனைவோர் பயிற்சி பெற்றிருக்கவேண்டும்.
கேள்வி: திட்டத்திற்கு அதன் மதிப்புக்கு சமமான தொகை பாதுகாப்பு தொகையாக காண்பிக்க வேண்டுமா?
பதில் : ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி PMEGP கடனில், திட்டமதிப்பு 5 லட்சம் ரூபாய் வரை, மதிப்புக்க சமமான பாதுகாப்பு தொகை காண்பிக்கத் தேவை இல்லை. 5 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரையிலான திட்டங்களுக்கு, CGTSME மதிப்புக்கு சமமான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும்
கேள்வி: திட்டம் தயாரிக்கும் பயனாளிக்கு உதவி செய்ய யாரை அணுகுவது?
பதில் : கதர் கிராம தொழில் ஆணையம், தொழில்முனைவோர் திட்ட அறிக்கை தயாரிக்க உதவுவதற்கு 73 மையங்களை      செயல்படுத்துகிறது.  இவற்றின் முகவரிகளை www.pmegp.in / www.kvic.org.in ஆகிய இணையதளங்களில் பார்த்துக்கொள்ளலாம்.
கேள்வி: ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட திட்ட அறிக்கைகளை சமர்பிக்கலாமா?
பதில்: அதிகளவில் பயனாளிகளை உருவாக்குவதற்காக, ஒரு குடும்பம் ஒரு திட்ட அறிக்கையினை மட்டுமே  சமர்ப்பிக்கலாம்.
கேள்வி: குடும்பம் என்பது எதை குறிக்கும்?
பதில் :     கணவர் மற்றும் அவரது மனைவி.
கேள்வி: நகர்புறங்களில் தொழில்களை அமைக்கலாமா?
பதில் :     மாவட்ட தொழில் மையத்தின் உதவியுடன் அமைக்கலாம்
கேள்வி: ஏற்கனவே செயல்படும் தொழில்களை இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரலாமா?
பதில் : முடியாது, புதிய தொழில்கள் தொடங்கினால் மட்டுமே, PMEGPல் பயன்பெற முடியும்.
கேள்வி: கதர்கிராம தொழில் ஆணையகத்தில் முன்னுதாரணமாக திட்ட அறிக்கைகள் இருக்கிறதா?
பதில் : இருக்கிறது. www.pmegp.in இணையதளத்தில் தொழில் வாரியான  திட்ட அறிக்கைகள் உள்ளன.
கேள்வி: தொழில் முனைவோர் பயிற்சி பெற, பயிற்சி மையங்கள் எங்கு செயல்படுகின்றன?
பதில் :  தொழில் முனைவோர் பயிற்சி மையங்கள் விபரங்களுக்கு http://www.pmegp.in இணையதளத்தில் பார்க்கலாம்.
கேள்வி: மான்ய உதவிக்கான குறிப்பிட்ட லாக் இன் காலம் (தொழில் வேறு நபருக்கு விற்கப்படக் கூடாத காலம்) என்ன?
பதில் : மூன்று வருடங்கள்
கேள்வி: இத்திட்டத்திற்கான மூலதன உதவியை இரண்டு நிறுவனங்களிடமிருந்து (வங்கி/நிதியுதவி அளிக்கும் நிறுவனங்கள்) பெறலாமா?
பதில் : கூடாது. இதுபோல் பெறவும் இயலாது.
கேள்வி: நமது சொந்த முதலீடு எவ்வளவு செலுத்தப்பட வேண்டும்?
10 % முதல்  15 % வரை

சிறுபான்மையினருக்கென உதவித் தொகை

பிரதமரின் சிறுபான்மையினருக்கான சிறப்பு 15 அம்சக் கொள்கைகளின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகையில் 30% மாணவியருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்ஜினியரிங் மற்றும் தொழில் நுட்பப் படிப்புகளில் பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படிப்பவர் இதற்கு தகுதியானவர்கள். ஏற்கனவே இது போன்ற சிறுபான்மையினருக்கான உதவித் தொகை, 17 ஆயிரத்து 182 பேருக்கு தரப்பட்டு வந்தது. இனி கூடுதலாக 20 ஆயிரம் பேர் இதைப்
பெறலாம்.
10ம் வகுப்பு முடித்து தற்போது பிளஸ் 1 படிப்பவர் தொடங்கி பி.எச்டி. வரைக்குமான படிப்புகளுக்கும் மத்திய அரசு இந்த உதவித் தொகையைத் தரவிருக்கிறது. 11வது ஐந்தாண்டு திட்டத்துக்குள் 15 லட்சம் உதவித் தொகைகளை சிறுபான்மையினருக்குத்தரவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் நுழைவுக்கட்டணம் மற்றும் பயிற்சிக்கட்டணம் போன்ற செலவுகள் அடங்கும். இந்த உதவித் தொகையின் ஒரு பகுதியாக தொழிற்படிப்புகளில் சேர உதவும் சிறப்புப் பயிற்சிகளும் தரப்படவுள்ளன. எனவே பத்திரிகைகளை கவனித்துவரவும். 
நன்றி : கல்வி மலர் . காம்

வியாழன், 16 ஜூன், 2011

இலங்கையின் போர்க்குற்றம்



இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விசாரணை தேவை என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.

இலங்கையின் போர்க்குற்றம் குறித்த முழுமையான விடியோ தொகுப்பை லண்டனைச் சேர்ந்த "சேனல் 4" தொலைக்காட்சி "இலங்கையின் கொலைக்களங்கள்" என்ற தலைப்பில் ஒளிபரப்பியது. இந்நிலையில், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது பேசிய அந்நாட்டுப் பிரதமர் போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
"சேனல் 4"  ஒளிபரப்பிய காட்சிகளை கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், போர்க்குற்றம் குறித்த குற்றச்சாட்டுகள் மீது இலங்கை அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் அலிஸ்டர் பர்ட், ஏற்கெனவே கருத்து தெரிவித்துள்ளார்.
video click






SRI LANKA'S KILLING FIELDS

புதன், 15 ஜூன், 2011

புற்று நோயை முற்றிலும் அழிக்க வராமல் தடுக்க ஒரு சிறந்த மருந்துவெறும் நூறு ரூபாயில்


ரொம்ப வேடிக்கைக்காக சொல்வது உண்டு. உலகத்திலேயே ரொம்ப ஈசியான விஷயம், சிகரெட் ஸ்மோக் பண்றதை விடுறதுதான் மச்சி!. நான் எத்தனை தடவை விட்டுருக்கேன்  தெரியுமா? 

"மச்சி, சரக்கு விட சொல்றா.. விட்டுரலாம். ஆனா , சிகரெட் விடுவது ரொம்ப ரொம்ப கஷ்டம்பா"... இது , புகை பழக்கம் உள்ள எல்லோரும் சொல்ற டயலாக்.
நிக்கோடின் பவர் அந்த மாதிரி .அப்படி சிகெரெட் பிடிப்பவர்களில்  10 க்கு  6 பேர்

 புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா !?

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் - மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது. 

 அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.

அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. 

        

    இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .


   இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .

சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன்        500  கிராம்
whisky(or)brandy              50  மில்லி

தயாரிப்பு முறை 
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்

தோலை நீக்கிவிடக்கூடாது

தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும்
அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்

இப்போது மருந்து தயாராகி விட்டது

மருந்தை உட்கொள்ளும் விதம் 

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து  மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும. பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது. 
     இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .

      இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .
  
உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்... ! சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது. 

ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம - கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க... அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !?
நாம மனசு வைச்ச எல்லாம் முடியும் சார்! எத்தனையோ தடவை விட்டுப் பார்த்தாச்சு.. இன்னும் ஒரே ஒரு தடவை, கடைசியா விட்டுப் பாருங்களேன்!

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes