வெள்ளி, 17 ஜூன், 2011

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு திட்டத்தை பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கேள்வி: இத்திட்டத்தின் அதிகபட்ச திட்ட மதிப்பீடு எவ்வளவு?

பதில்: உற்பத்தி பிரிவிற்கு 25 லட்சம் ரூபாய். சேவை பிரிவிற்கு 10 லட்சம் ரூபாய்.
கேள்வி: நிலத்தின் மதிப்பு/விலை, திட்ட மதிப்பிட்டில் சேருமா?
பதில்:

பயனாளிகளின் வகை
மான்ய உதவி அளவு (திட்ட மதிப்பில்)
பகுதி (திட்டம் அமையுமிடம்)
நகர்
புறம்
கிராமப்
புறம்
பொதுப்பிரிவு
15%
25%
சிறப்பு (ஷெட்யூல்ட்பிரிவு, மலை ஜாதியினர், மிகவும்பிற்படுத்தப்
பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள்ராணுவத்தினர், உடல்ஊனமுற்றோர், வடகிழக்கு மாநிலங்கள், மலைவாழ் மற்றும், எல்லைப்பகுதியினர்
25%
35%
கேள்வி: திட்ட மதிப்பீட்டில் உள்ளவை என்னென்ன?
பதில்     :    அசையா சொத்து முதலீட்டு செலவுக்கான கடன், உற்பத்தி செலவுக்கு ஒரு முறைக்கான முதல், பொதுப்பிரிவில், திட்ட மதிப்பில் பத்து சதம் சொந்த முதலீடு, நலிவடைந்தோர் என்றால் திட்டமதிப்பில் ஐந்து  சதம் சொந்த முதலீடு.
கேள்வி : பயனாளிகள் யார் யார்?
பதில்     :     தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள், சுயஉதவிக்குழுக்கள், 
கேள்வி: நிதி உதவி அளிக்கும் நிறுவனங்கள் எவை?
பதில்     : 27 பொதுத்துறை வங்கிகள், மண்டல கிராம வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மாநில கமிட்டியின் அனுமதியோடு செயல்படும் தனியார் வணிக வங்கிகள்
கேள்வி: முதலீட்டு செலவுக்கடன் / பணக் கடன் வரம்பு அளவு எப்படி உபயோகப்படுத்தப்படுகிறது?
பதில்    :  நடைமுறை செலவு மூலதனம் குறைந்தபட்சம் மூன்று வருடத்துக்குள் 100சதவீதம்  பணக்கடன் அளவை எட்டவேண்டும். கடன் அனுமதிக்கப்ட்ட அளவில் 75 சதவீதத்திற்கு குறையாமல் பயன்படுத்த வேண்டும்
கேள்வி: பயனாளி, திட்டத்திற்கான விண்ணப்பத்தினை எங்கு சமர்பிக்க வேண்டும்?
பதில்  : பயனாளி தனது விண்ணப்பத்தினை அருகிலுள்ள கதர்கிராம         தொழில் ஆணையம் / கதர்கிராம தொழில் வாரியம்/ மாவட்ட தொழில் மையம் அல்லது வங்கிகளில் (குறைந்தது 2-3 வார தொழில் முனைவோர் பயிற்சி எடுத்தோர்) கொடுக்கலாம். மேலும் இதுகுறித்த அலுவலக முகவரிக்கு www.pmegp.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
கேள்வி: கிராமத் தொழில் என்றால் என்ன?
பதில்   : கிராமத்தில் அமைந்திருக்கும் எல்லா கிராமத் தொழில்களும் (சேர்க்கப்பட முடியாத தொழில்கள் தவிர) மின்சாரத்தை பயன் படுத்தியோ, பயன்படுத்தாமலோ உற்பத்திசெய்யும் பொருட்கள் அல்லது செய்யும் சேவைகள், அதில் செய்யப்படும் ஒரு தொழிலாளருக்கான அசையா முதலீட்டுத் தொகை, சமவெளியில் ஒருலட்சம் ரூபாய் மற்றும் மலைப் பகுதியில் 1.5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் தொழில்களை கிராமத்தொழில் எனப்படுகிறது.
கேள்வி: கிராமப்பகுதி என்றால் என்ன?
பதில் : மாநில வருவாய்துறையின் அட்டவணைப்படி கிராமம் என்று கூறப்படும் பகுதிகள் (மக்கள் தொகை கருதப்படாது).   நகர்புறங்கள் என குறிப்பிடப்பட்டாலும், அதன் மக்கள்தொகை 20,000க்கு மிகாமல் இருந்தால், அதுவும் கிராமம் என்றே கணக்கிடப்படும்.
கேள்வி: வயது வரம்பு என்ன?
பதில்   : 18 வயதுக்கு மேலுள்ளவர் இத்திட்டத்தில் பங்கேற்று, நிதி உதவி பெறத்தகுதி உடையவர்
கேள்வி: இத்திட்டத்திலுள்ள முக்கியமான நிபந்தனைகள் யாவை?
பதில்  : தொழில் தொடங்கவுள்ள பகுதி, கிராமப்புற பகுதி என்ற தகுதியை பெற்றிருக்க வேண்டும். ஒரு நபரின் உற்பத்திக்கான முதலீடு, தொழில் முனைவோரின் முதலீடு, சேர்க்கப்படாத தொழில்கள் பட்டியல் ஆகியவை முக்கியமாக கவனிக்க வேண்டியவை. தொடங்கப்படும் தொழில் புதிய திட்டமாக இருத்தல் வேண்டும்.
கேள்வி: தொழில் முனைவோர் பயிற்சி அவசியமா?
பதில்:வங்கிலிருந்து முதல் தவணை கடன் தொகை கொடுப்பதற்கு முன் பயனாளி 2-3 வார தொழில் முனைவோர் பயிற்சி பெற்றிருக்கவேண்டும்.
கேள்வி: திட்டத்திற்கு அதன் மதிப்புக்கு சமமான தொகை பாதுகாப்பு தொகையாக காண்பிக்க வேண்டுமா?
பதில் : ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி PMEGP கடனில், திட்டமதிப்பு 5 லட்சம் ரூபாய் வரை, மதிப்புக்க சமமான பாதுகாப்பு தொகை காண்பிக்கத் தேவை இல்லை. 5 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரையிலான திட்டங்களுக்கு, CGTSME மதிப்புக்கு சமமான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும்
கேள்வி: திட்டம் தயாரிக்கும் பயனாளிக்கு உதவி செய்ய யாரை அணுகுவது?
பதில் : கதர் கிராம தொழில் ஆணையம், தொழில்முனைவோர் திட்ட அறிக்கை தயாரிக்க உதவுவதற்கு 73 மையங்களை      செயல்படுத்துகிறது.  இவற்றின் முகவரிகளை www.pmegp.in / www.kvic.org.in ஆகிய இணையதளங்களில் பார்த்துக்கொள்ளலாம்.
கேள்வி: ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட திட்ட அறிக்கைகளை சமர்பிக்கலாமா?
பதில்: அதிகளவில் பயனாளிகளை உருவாக்குவதற்காக, ஒரு குடும்பம் ஒரு திட்ட அறிக்கையினை மட்டுமே  சமர்ப்பிக்கலாம்.
கேள்வி: குடும்பம் என்பது எதை குறிக்கும்?
பதில் :     கணவர் மற்றும் அவரது மனைவி.
கேள்வி: நகர்புறங்களில் தொழில்களை அமைக்கலாமா?
பதில் :     மாவட்ட தொழில் மையத்தின் உதவியுடன் அமைக்கலாம்
கேள்வி: ஏற்கனவே செயல்படும் தொழில்களை இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரலாமா?
பதில் : முடியாது, புதிய தொழில்கள் தொடங்கினால் மட்டுமே, PMEGPல் பயன்பெற முடியும்.
கேள்வி: கதர்கிராம தொழில் ஆணையகத்தில் முன்னுதாரணமாக திட்ட அறிக்கைகள் இருக்கிறதா?
பதில் : இருக்கிறது. www.pmegp.in இணையதளத்தில் தொழில் வாரியான  திட்ட அறிக்கைகள் உள்ளன.
கேள்வி: தொழில் முனைவோர் பயிற்சி பெற, பயிற்சி மையங்கள் எங்கு செயல்படுகின்றன?
பதில் :  தொழில் முனைவோர் பயிற்சி மையங்கள் விபரங்களுக்கு http://www.pmegp.in இணையதளத்தில் பார்க்கலாம்.
கேள்வி: மான்ய உதவிக்கான குறிப்பிட்ட லாக் இன் காலம் (தொழில் வேறு நபருக்கு விற்கப்படக் கூடாத காலம்) என்ன?
பதில் : மூன்று வருடங்கள்
கேள்வி: இத்திட்டத்திற்கான மூலதன உதவியை இரண்டு நிறுவனங்களிடமிருந்து (வங்கி/நிதியுதவி அளிக்கும் நிறுவனங்கள்) பெறலாமா?
பதில் : கூடாது. இதுபோல் பெறவும் இயலாது.
கேள்வி: நமது சொந்த முதலீடு எவ்வளவு செலுத்தப்பட வேண்டும்?
10 % முதல்  15 % வரை

0 comments:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes